ADDED : ஏப் 14, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் கிராமத்தில் பெரியாண்டவர், எல்லம்மன் சுவாமி திருவிழா நேற்று நடந்தது. இதில், 17 கூம்பு பங்காளிகளான தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
500க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி கறி விருந்து நடந்தது. மேலும் நேற்று காலை பெரியாண்டவர், எல்லம்மன் கரகங்கள் தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு பெரியாண்டவர் சுவாமிக்கு, கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பரவசம் அடைந்து சாமியாடி சுவாமி தரிசனம் செய்தனர். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

