தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


UPDATED : அக் 04, 2026 05:02 AM

ADDED : அக் 04, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:02 AM ADDED : அக் 04, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: புரட்டாசி மாதத்தின், 3வது சனிக்கிழமையான நேற்று, பழைய தர்மபுரி அடுத்த வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோவிலில், அதிகாலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. வெள்ளி கவச அலங்காரத்தில் மூலவர் அருள் பாலித்தார். அதேபோல், மணியம்பாடி வெங்-கட்ரமண சுவாமி தங்கக்கவச அலங்காரத்திலும், அதியமான்-கோட்டை சென்றாய பெருமாள், லளிகம் சென்றாய பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.

* அரூர் பழையபேட்டை கரிய

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதே போல், அரூர் பரசுராமன் தெருவிலுள்ள வெங்கடேச பெருமாள் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்-கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் பெரியப்பட்டி, மருதிப்-பட்டி, பெத்துார், கொங்கவேம்பு, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தொங்கனுார் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க, மக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், உழவர் சந்தை மற்றும் தனியார் காய்கறி மண்டிகளில், வழக்கத்தை விட கூடுதலாக, காய்கறிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* கடத்துார் அடுத்த மணியம் பாடியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சுவாமி, தங்கக்கவச அலங்காரத்தில் அருள்-பாலித்தார். கடத்துாரில் உள்ள சீனிவாச பெருமாள், பொம்மிடி அடுத்த கதிரிபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி, இருளப்-பட்டி போடுவராயன் மலையில் அமைந்துள்ள பெருமாள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us