/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் தாலுகா ஆபீஸ் வளாகத்திலிருந்து பெட்டிஷன் எழுத்தர்கள் வெளியேற்றம்
/
அரூர் தாலுகா ஆபீஸ் வளாகத்திலிருந்து பெட்டிஷன் எழுத்தர்கள் வெளியேற்றம்
அரூர் தாலுகா ஆபீஸ் வளாகத்திலிருந்து பெட்டிஷன் எழுத்தர்கள் வெளியேற்றம்
அரூர் தாலுகா ஆபீஸ் வளாகத்திலிருந்து பெட்டிஷன் எழுத்தர்கள் வெளியேற்றம்
ADDED : ஜன 29, 2025 07:11 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் வருவாய் உள்வட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் அரூர் தாலுகா அலுவலகம் மூலம், பல்வேறு சான்றுகளையும் உதவிகளையும் பெறவேண்டிய நிலை உள்ளது.
இதற்காக தினமும், நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், அங்குள்ள இ-சேவை மையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் புதிதாக பெற பலர் வருகின்றனர். தங்கள் தேவைக்காக மக்கள் கோரிக்கை மனு கொடுக்க வேண்டி உள்ளது. இதற்காக அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட, பெட்டிஷன் எழுத்தர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு மனு எழுத, 50 முதல், 100 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்தனர். மேலும், அப்பாவி மக்களிடம் பணிகளை முடித்து தர, கணிசமான பணத்தை கட்டாயப்படுத்தி வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால், நேற்று முன்தினம் முதல், அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பெட்டிஷன் எழுத்தர்கள் மனு எழுத தடையால் அவர்கள், வெளியே அமர்ந்து மனு எழுதி வருகின்றனர்.
இது குறித்து, அரூர் தாசில்தார் பெருமாளிடம் கேட்டபோது, ''ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் புதிதாக எடுக்க பணம் வசூலிப்பதாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. இதையடுத்து, தாலுகா அலுவலக வளாகத்தில், பெட்டிஷன் எழுத்தர்கள் மனு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

