/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் கோரி மனு
/
துாய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் கோரி மனு
ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
தர்மபுரி: துாய்மை பணியாளர்களுக்கு, 7-வது ஊதிய குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.இது குறித்து, அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கிராம பஞ்., பணிபுரிந்து வரும், துாய்மை பணியாளர்களுக்கு, 7வது ஊதிய குழுவின் படி, உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை.
அதே போல், 2013ல் நியமனம் செய்த கூடுதல் துாய்மை பணியாளர்களுக்கும் நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை. எனவே, அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் ஊதியத்தை வழங்க வேண்டும். மாதத்திற்கு, 2 முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதற்கு, 300 ரூபாய் இதுவரை எந்த பஞ்சாயத்திலும் வழங்கவில்லை. இத்தொகையை விரைவில் வழங்க வேண்டும். பஞ்.,ல் பணிபுரிந்து வரும் துாய்மை காவலர்களுக்கு, பிரதி மாதம், 5-க்குள் ஊதியம் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு, ஒரே மாதிரியான ஊதியத்தை, மாவட்ட ஆட்சியர் கருவூல அலுவலகத்தில், முறைப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.