ADDED : ஜூன் 10, 2026 02:26 AM

அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,ல், கடந்த, 40
ஆண்டுகளுக்கு மேலாக, 67 குடும்பத்தினர் கிராம நத்தத்தில் வீடு கட்டி
வசிக்கின்றனர்.
இவர்களுக்கு இதுவரை வீட்டுமனைப்பட்டா
வழங்கப்படவில்லை. இதனிடையே, தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா
வழங்கக்கோரி நேற்று, அரூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார்
வள்ளியிடம் செல்லம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர். இதில், விவசாய
தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜெயகாந்தன், குமரேசன், தேசிங்கு
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
