தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் நகராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி மனு

அரூர் நகராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி மனு

அரூர் நகராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி மனு


ADDED : டிச 18, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சி மூன்றாவது வார்டு மக்கள், கலெக்டர் சதீஸ்சிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில், திருவள்ளூவர் நகர், கே.கே.,நகர், முருகர் கோவில் தெரு ஆகியவற்றில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவை, முறையாக செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுக்கள் பெயரளவில் ஏற்பு மட்டும் செய்யப்படுகிறது. எனவே, திருவள்ளுவர் நகர், கே.கே.,நகர், முருகர் கோவில் தெரு ஆகியவற்றில், சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us