/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலை பழங்குடியின மக்களின் நில உரிமை பாதுகாக்க கோரி மனு
/
வத்தல்மலை பழங்குடியின மக்களின் நில உரிமை பாதுகாக்க கோரி மனு
வத்தல்மலை பழங்குடியின மக்களின் நில உரிமை பாதுகாக்க கோரி மனு
வத்தல்மலை பழங்குடியின மக்களின் நில உரிமை பாதுகாக்க கோரி மனு
ADDED : அக் 01, 2024 01:45 AM
வத்தல்மலை பழங்குடியின மக்களின்
நில உரிமை பாதுகாக்க கோரி மனு
தர்மபுரி, அக். 1-
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்., உட்பட்ட வத்தல்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் நிலம் மற்றும் அதை சார்ந்த விவசாயம் தான். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, வத்தல் மலையை பழங்குடி மக்கள் வாழும் பகுதியாக அறிவித்து அரசியல் சட்ட அட்டவணை, 5ல் சேர்க்க வேண்டும். வத்தல் மலையை சுற்றுலாத்தலம் என அறிவித்த பின், அங்குள்ள பழங்குடியினர் வேகமாக, நில உரிமையை இழந்து வருகின்றனர். இதில், கொண்டகரஹள்ளி, சுங்கரஹள்ளி, தின்னஹள்ளி பகுதிகளில் பழங்குடியினர் நிலங்களை பழங்குடியினர் அல்லாதோர் வாங்குவதை தடை செய்ய வேண்டும். மேலும், பழங்குடியினர் அல்லாதோர் வாங்கி பத்திரப்பதிவு செய்து, பெயர் மாற்றம் செய்துள்ள, அனைத்து சிட்டா, பட்டா மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். நாட்டு மாடுகள் வளர்ப்பதற்கு பழங்குடியின மக்களுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்க திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், வத்தல் மலையில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே பஞ்., ஆக உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.