/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் மருந்தகங்களின் உரிமை ரத்து'
/
'கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் மருந்தகங்களின் உரிமை ரத்து'
'கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் மருந்தகங்களின் உரிமை ரத்து'
'கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் மருந்தகங்களின் உரிமை ரத்து'
ADDED : டிச 20, 2024 01:12 AM
'கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் மருந்தகங்களின் உரிமை ரத்து'
கிருஷ்ணகிரி, டிச. 20-
கிருஷ்ணகிரியில் மருந்துகட்டுப்பாட்டு துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய சுகாதார திட்டத்தில், தர்மபுரி மண்டல அளவில், கருக்கலைப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. தர்மபுரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் அதியமான் தலைமை வகித்து பேசியதாவது:
கருக்கலைப்பு மருந்துகளை மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்களில், டாக்டர்கள் அறிவுரை படியே விற்க வேண்டும். மருத்துவமனை அல்லாத இடங்களில் உள்ள மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்றால் அந்த கடை மூடப்படுவதோடு, உரிமையும் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மருந்து கட்டுப்பாட்டு துறையினர், மருந்தகங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது கருக்கலைப்பு மாத்திரைகள் முறைகேடாக விற்றது கண்டுபிடிக்கப்பட்டாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக டாக்டர்கள் பவித்ரா, தஸ்லின் ஆகியோர் பேசுகையில், 'கரு உருவானதில் ஏதும் பாதிப்புகள் இருந்தால் மட்டுமே, கருக்கலைப்புக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பர். குழந்தை வளர்ச்சியில், 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம். அதில், மகப்பேறு சிக்கல் இருக்கும் பட்சத்தில் டாக்டர்கள் முடிவின் படி மட்டுமே கருக்கலைப்புகள் செய்ய வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகளை, கடைகளில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
குடும்ப நலத்துறை இணை இயக்குனர் சாந்தி மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ராஜிவ்காந்தி, விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் மெக்கல்ஸ் நடத்தும், 650க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.