/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காவிரிக்கரையில் 1 கோடி பனைவிதை நடும் பணி தொடக்கம்
/
காவிரிக்கரையில் 1 கோடி பனைவிதை நடும் பணி தொடக்கம்
ADDED : செப் 09, 2024 07:06 AM
ஒகேனக்கல்: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பு இல்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக, ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை, காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி நேற்று, ஒகேனக்கல்லில் தொடங்கியது. இதை, மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒகேனக்கல் முதல், பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட, 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., தொலைவிற்கு பனைவிதை நடப்பட உள்ளது. இப்பணியில், 100-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஊட்டமலை பரிசல்துறை அருகே, தமிழக அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், தர்மபுரி மாவட்ட நிருவாகம் இணைந்து காவிரிக்கரையில், நீர்நிலைகளில், ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 10 வட்டாரங்களில், 251 ஊராட்சிகளில், 5 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் கவுரவ்குமார், எஸ்.பி., மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், பெங்களூரு ஜவுளி அமைச்சகம் மத்திய பட்டுவாரிய இயக்குனர் மீனாட்சி, ஆர்.டி.ஓ., காயத்ரி, கல்வியல் இணை இயக்குனர் சிந்தியாசெல்வி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* நல்லம்பள்ளி ஒன்றியம், நல்லம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோவிலுார் ஏரியில், 1,000 பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கியது. இதில், பஞ்., தலைவி புவனேஸ்வரி தலைமை வகித்தார்.* சில்லாரஅள்ளி ஏரிக்கரையில் முதற்கட்டமாக, 2,500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.