தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பிளாஸ்டிக் பயன்பாடு: அபராதம் விதிப்பு

பிளாஸ்டிக் பயன்பாடு: அபராதம் விதிப்பு

பிளாஸ்டிக் பயன்பாடு: அபராதம் விதிப்பு


ADDED : ஜூன் 30, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், கடத்துார் பேரூராட்சி பகுதி-களில் தடை செய்த பிளாஸ்டிக் பயன்பாடு அதிக-ரித்து வருவது குறித்து நேற்று, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சரவணன் உத்-தரவின் படி, பேரூராட்சி பகுதிகளில் சுற்றுச்சூ-ழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், பேரூராட்சி அலு-வலர்கள் விக்னேஷ், செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் பேரூராட்சி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்-டனர். புதிய மற்றும் பழைய, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி மெயின் ரோடு, அரூர் மெயின் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சில மளிகை கடைகள், பேக்-கரி, டீ கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் தமி-ழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகள் பதுக்கி வைத்து பயன்ப-டுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்கடைகளில் இருந்த, 10.5 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்-தாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலர் வெங்கடாசலம்

எச்சரிக்கை விடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us