ADDED : ஆக 19, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்,:பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,'கலையோடு
விளையாடு' நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் பழனி தலைமை
வகித்தார். கல்வி, 40 என்ற அமைப்பின் மூலம் கருத்தாளர் சந்திரா,
மாணவர்களுக்கு கதை, ஓவியம், பாடல், நாடகம், பொம்மலாட்டம், நடிப்பு,
காகித மடிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கினார்.கலைகள் மூலமாக
மாணவர்களின் கற்பனைத் திறன் மேம்படுதல், தனித்திறமைகளை வளர்த்துக்
கொள்ளுதல், பன்முகத்தன்மையோடு செயல்படுதல் உள்ளிட்ட திறமைகள்
மாணவர்களிடையே வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சி உதவும் என்றார். கல்வி,
40 அமைப்பு சார்பாக வசந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
