/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு உறுதிமொழி
/
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு உறுதிமொழி
ADDED : நவ 28, 2024 12:56 AM
குழந்தைகளுக்கு எதிரான
வன்முறை தடுப்பு உறுதிமொழி
தர்மபுரி, நவ. 28-
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம், நவ., 27 முதல், 29 வரை பள்ளிகளில் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, 'குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா' என்ற தலைப்பில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, தர்மபுரி அடுத்த, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் விக்ரமன் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சிவராசன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர், மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழாசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.