ADDED : ஆக 21, 2026 01:22 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்த, 16 வயதுடைய மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைபள்-ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த, 18ம் தேதி வயிற்று வலி எனக்கூறி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின் காலை, 11:30 மணிக்கு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிச்-சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
