தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பா.ம.க., மாவட்ட செயற்குழு

பா.ம.க., மாவட்ட செயற்குழு

பா.ம.க., மாவட்ட செயற்குழு


ADDED : பிப் 26, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., செயற்குழு கூட்டம் கடத்துாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்றார். கூட்டத்தில் பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மாநில, பா.ம.க., துணைத் தலைவர் குணசேகரன், அரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மாநில இளைஞர் சங்க செயலாளர் அண்ணாமலை, பசுமை தாயகம் துணைச்செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் வரும் சட்ட சபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதியை, பா.ம.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்.

தேர்தலில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் முனைப்பாக செயல்பட்டு, கூட்டணி கட்சிக்கு பாடுபட வேண்டும். தி.மு.க., மக்கள் விரோத செயலை, பா.ம.க., ஊடகப்பிரிவு வாயிலாக, சமூக வலைத்தளங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இளைஞர் சங்க தலைவர் செந்தில் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us