/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழக முதல்வரை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழக முதல்வரை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்வரை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்வரை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2024 01:05 AM
தமிழக முதல்வரை கண்டித்து
பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, நவ. 27-
தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, பா.ம.க.,வினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸின் அறிக்கையை விமர்சித்த, தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, பா.ம.க., சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்னாகரம் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தலைமையில், தர்மபுரி, எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஆர்ப்பாட்டம் தொடங்கிய, 2 நிமிடத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 253 பேரை போலீசார் கைது செய்து, பின் மாலையில் விடுவித்தனர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், சப் கலெக்டர் அலுவலகம் எதிரே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் உட்பட, 55 பேரை போலீசார் கைது செய்து, பின் மாலையில் விடுவித்தனர்.
* வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.