sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு

/

துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு

துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு

துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : அக் 10, 2025 01:33 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, ஒரு வாரமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பென்னாகரம் துணை மின் நிலையத்தில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டார்.

பென்னாகரம் துணை மின்நிலையத்தில் அடுத்தடுத்து, 2 டிரான்ஸ்பார்மர்கள் பழுதால், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. 2 டிாரன்ஸ்பார்மர்கள் பழுதால், இப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

துணை மின் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, பென்னாகரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வித்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us