/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ
ADDED : ஜன 08, 2025 02:59 AM
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ
பாப்பிரெட்டிப்பட்டி, : தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த நத்தமேடுவை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் பித்தன், 26. கூலித்தொழிலாளி. இவருக்கு, பொம்மிடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் கடந்த அக்., 29ல் பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் நடந்தது. இது குறித்த புகார் படி, தர்மபுரி ஒன்றிய ஊர்நல அலுவலர் நிர்மலா அக்கிராமத்தில்
விசாரித்தார். விசாரணையில், சிறுமிக்கு இளவயது திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து, பொம்மிடி போலீசார், பித்தன், அவரது தந்தை மாதப்பன், 55, தாய் வேடியம்மாள், 50, சிறுமியின் பெற்றோர் என, 5 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.