/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'
/
மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் தொல்லை உரக்கடைக்காரருக்கு 'போக்சோ'
ADDED : ஏப் 24, 2025 01:25 AM
அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, கல்லுாரி மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த, உரக்கடை உரிமையாளர் மீது, போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது. தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பூதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சென்னியம்பட்டியை சேர்ந்த வெற்றிவேல், 34. இவர் வெள்ளக்கல் பகுதியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த, 4 ஆண்டுக்கு முன், 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை, வீடியோ பதிவு செய்து கொண்டு, மாணவியை அவ்வப்போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது, அம்மாணவி கல்லுாரியில் படித்து வரும் நிலையில், மீண்டும் மாணவியை ஆசைக்கு இணங்க மிரட்டியுள்ளார். விரக்தியடைந்த மாணவி கடந்த, 21 அன்று போலீசில் புகார் அளித்தார். அதன் படி, அதியமான்கோட்டை போலீசார், வெற்றிவேல் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.