ADDED : பிப் 21, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 17 வயது மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த, 21 வயது வாலிபர், மாணவியை நல்லம்-பள்ளி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து, சைல்டு ஹெல்ப் லைன் அமைப்-புக்கு வந்த புகார் குறித்து, தொப்பூர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, சிறு-மியை திருமணம் செய்து, தலைமறைவாகி-யுள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.
