/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ
/
மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ
ADDED : பிப் 12, 2025 07:08 AM
அரூர்: அரூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை செக்காம்பட்டியை சேர்ந்த ஹரிஷ், 23, என்பவர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியார் பள்ளி பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்தாண்டு, மே., 7ல் இருவரும் கைலாயபுரம் முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மாணவி, தனக்கு திருமணம் ஆனதை வீட்டில் மறைத்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த மாணவிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், ஹரிஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.