/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ
ADDED : நவ 15, 2024 02:16 AM
சிறுமியை கர்ப்பமாக்கிய
வாலிபர் மீது போக்சோ
தர்மபுரி, நவ. 15-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள் கடந்த, 6 மாதத்திற்கு முன், பென்னாகரத்திலுள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது, குளாத்திரம்பட்டியை சேர்ந்த நேதாஜி, 25 என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆக., 22ல் வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி, அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிலேயே வசித்து வந்தார். அவருக்கு உடல் நல பாதிப்பால், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பரிசோதித்தபோது, சிறுமி, 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், இது குறித்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, நேதாஜி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.