/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
/
பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ADDED : ஜூலை 14, 2025 04:15 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதி பொக்லைன் உரிமையா-ளர்கள், கடந்த ஏப்.,ல் பொக்லைன் வாடகையை உயர்த்த கோரிக்கை விடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நல்லம்பள்ளி,
அரூர் பகுதி பொக்லைன் உரிமையாளர்-களும் வாடகை உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இந்நி-லையில், தர்மபுரி அருகே மாட்லாம்பட்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் பொக்லைன் வாகனம் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்-சூரன்ஸ் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் வாக-னங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வாகனத்தை இயக்க, குறைந்தபட்சம், ஒரு மணி நேர வாடகை, 2,000 ரூபாய் வழங்க வேண்டும். கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கு, 1,300 ரூபாய் கட்டணம் வழங்க கோரிக்கை விடுத்து நேற்று மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன், மாட்லாம்பட்டி பொக்லைன் நல உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.