/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை
/
வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை
ADDED : ஜூலை 27, 2024 12:31 AM
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவதில்லை.
இதனால் விபத்து ஏற்படும்போது, உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, அரூர் போக்குவரத்து போலீசார், தினமும் வர்ணதீர்த்தம், கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி, இனி டூவீலர்களில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.