/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை
/
கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை
கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை
கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை
ADDED : ஏப் 27, 2024 06:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர் நத்தம் கிராமத்தில், ஓங்காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அனுமதி வேண்டி, விழா குழு சார்பில் பொம்மிடி போலீசில் மனு கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் களஆய்வு செய்தனர். பையர் நத்தம் கிராமத்தில் நடன நிகழ்ச்சி நடைபெறும் பட்சத்தில், இக் கிராமத்திற்கு பக்கத்து கிராமமான கதிரபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., - பா.ம.க., கட்சியினர் இடையே பிரச்னை ஏற்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இக் கிராமத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் பட்சத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. திருவிழா மட்டும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திக் கொள்ள பொம்மிடி போலீசார் அனுமதி வழங்கினர். ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

