/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவியருக்கு காவலர் தின விழிப்புணர்வு
/
அரசு பள்ளி மாணவியருக்கு காவலர் தின விழிப்புணர்வு
ADDED : செப் 09, 2025 02:35 AM
காரிமங்கலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை சம்பவங்களை தடுக்கும் வகையில், காவலர் தினத்தை முன்னிட்டு, காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அப்போது, காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர், ஸ்டேஷனில் உள்ள, கோப்புகள், ஆயுதங்கள் மற்றும் அறைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கவும் மற்றும் தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் எண், 181 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பயன்படுத்தப்படும் எண், 1098 சைபர் கிரைம் விழிப்புணர்வு, 1930 ஆகிய எண்களை எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் மாணவியருக்கு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.