/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுவர்கள் ஓட்டி வந்த 11 பைக் பறிமுதல் விதிமீறலுக்கு போலீசார் அபராதம் விதிப்பு
/
சிறுவர்கள் ஓட்டி வந்த 11 பைக் பறிமுதல் விதிமீறலுக்கு போலீசார் அபராதம் விதிப்பு
சிறுவர்கள் ஓட்டி வந்த 11 பைக் பறிமுதல் விதிமீறலுக்கு போலீசார் அபராதம் விதிப்பு
சிறுவர்கள் ஓட்டி வந்த 11 பைக் பறிமுதல் விதிமீறலுக்கு போலீசார் அபராதம் விதிப்பு
ADDED : அக் 03, 2025 01:44 AM
அரூர், அரூரில், சிறுவர்கள் ஓட்டி வந்த, 11 டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார், விதிமீறலுக்காக அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், சமீப காலமாக, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சாலைகளில் லைசென்ஸ் இல்லாமல் பைக்குகளில் பறப்பது அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட், கச்சேரி மேடு, திரு.வி.க., நகர், கடைவீதி, மஜீத்தெரு, போலீஸ் ஸ்டேஷன், நான்கு ரோடு உள்ளிட்ட இடங்களில் ஒரே பைக்கில், 4 பேர் வரை அமர்ந்து சாலைகளில் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.
அத்துடன் பைக் ரேஸ் என, சாகச பயணம் செய்து, பார்ப்பவர்களை பதற வைக்கின்றனர். இவர்கள் எதிரே வரும் வாகனத்தை பொருட்படுத்துவதில்லை. எந்த இடத்திலும், சாலை விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை. இதுபோன்ற சிறுவர், மாணவர்களால், சாலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும், இதர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ஒதுங்க வேண்டியுள்ளது. டூவீலர்கள் ஓட்டிச் செல்லும் சிறுவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அரூர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், அரூரில் பாட்சாபேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க., நகர், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த, 11 சிறுவர்களை பிடித்தனர். அவர்கள் அனைவரும், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து, 11 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிவேகமாக செல்வது, பைக் ரேஸ் செய்வது, ஒரே பைக்கில், மூன்று பேர் செல்வது என, போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், சிறுவர்களின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரவழைத்த போலீசார், சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கக்கூடாது என, எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.