/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் இ.பி.எஸ்., பிரசார பயணம் கடும் கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்
/
தர்மபுரியில் இ.பி.எஸ்., பிரசார பயணம் கடும் கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்
தர்மபுரியில் இ.பி.எஸ்., பிரசார பயணம் கடும் கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்
தர்மபுரியில் இ.பி.எஸ்., பிரசார பயணம் கடும் கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்
ADDED : செப் 30, 2025 01:44 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், கடத்துாரில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மேற்கொள்ளவுள்ள பிரசார பயணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுடன், அரூர் டி.எஸ்.பி., ஆலோசனை நடத்தி, கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும் வரும் அக்., 2 மற்றும், 3ம் தேதி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
வரும் அக்., 2ல் பிரசாரம் மேற்கொள்ளும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி கடத்துாரில், பொதுக்கூட்டத்திற்கான அனுமதி பெற, நேற்று கடத்துாரில் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கரை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன், எம்.எல்.ஏ.,க்கள்- பாப்பிரெட்டிப்பட்டி- கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.
அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது. இதில், இ.பி.எஸ்., வருகையின் போது அவருடன் முன், பின் வரும் வாகனங்களின் எண்ணிக்கை, கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தைகள், 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோரை கூட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கூட்டத்திற்கு வருகை தருவோரின் முழுமையான விபரம், அவர்களை ஒழுங்குப்படுத்த போதிய தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவருக்கும் குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். கூட்டத்திற்கு காவல், வருவாய், பொதுப்பணி மற்றும் மின்வாரியத்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதியும், அவர்களின் வழிகாட்டு முறைகளையும் கடை
பிடிக்க வேண்டும். மேலும், சாலையோரங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மீது, மக்கள் நிற்கும் அளவிற்கு பலகைகள் அல்லது இரும்பு தகடுகள் அமைத்து மூட வேண்டும்.
எளிதில் பஸ் மற்றும் ஆம்புலன்ஸ் சென்று வர, சாலையில் வழிவிட வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், வாகனங்கள் செல்ல, முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். எவ்வித அசம்பாவிதமும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தொடர்ந்து அரூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நிற்கும் இடங்கள், இ.பி.எஸ்., செல்லும் வழிகளை டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், கோவிந்த
சாமி, சம்பத்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மதிவாணன் உள்ளிட்ட
நிர்வாகிகள் உடனிருந்தனர்.