/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
/
மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 06, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த, 15 வயது மாணவி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 31ல் வங்கியில் பணம் எடுக்க சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கர்த்தானுாரை சேர்ந்த மாறன், 20, என்பவர் மாணவியை கடத்திச்சென்று, தர்-மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின், மாணவியை ஊரில் தேடுவது தெரிந்து, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுச் சென்றுள்ளார். புகார் படி, கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, மாறனை தேடி வருகின்றனர்.

