/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொலையில் தொழிலாளி சரணடைந்த விவகாரம் 2வது நாளாக மூதாட்டி உடலை தேடும் போலீசார்
/
கொலையில் தொழிலாளி சரணடைந்த விவகாரம் 2வது நாளாக மூதாட்டி உடலை தேடும் போலீசார்
கொலையில் தொழிலாளி சரணடைந்த விவகாரம் 2வது நாளாக மூதாட்டி உடலை தேடும் போலீசார்
கொலையில் தொழிலாளி சரணடைந்த விவகாரம் 2வது நாளாக மூதாட்டி உடலை தேடும் போலீசார்
ADDED : செப் 18, 2025 01:23 AM
அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங்கை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார், 42. உறவினரான சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த காக்கம்பாடியை சேர்ந்த வெள்ளச்சி, 63, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கினார்.
கடனை திரும்ப கேட்டு கடந்த, 5ல் விஜயகுமார் வீட்டிற்கு சென்ற வெள்ளச்சி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பேத்தி தேவி, 24, புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் வெள்ளச்சியை தேடி வந்தனர்.
கடந்த, 15ல் வேலுார் மாவட்டம், பாகாயம் போலீசில் வெள்ளச்சியை வெட்டி கொன்று விட்டதாக கூறி, விஜயகுமார் சரணடைந்துள்ளார். தகவலின்படி கோட்டப்பட்டி போலீசார், விஜயகுமாரை அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், வீட்டிற்கு வந்த வெள்ளச்சியை, ஒருவர் பணம் தர வேண்டும் வாங்கி தருகிறேன் எனக்கூறி, வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடுவாளால் வெட்டி கொன்று விட்டு, அவரது காதிலிருந்த ஒரு பவுன் தோட்டை எடுத்து கொண்டு உடலை வனத்திலேயே விட்டு வந்ததாகவும், போலீசார் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்து, பாகாயம் போலீசில் சரணடைந்தாகவும் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் விஜயகுமாருடன் வனப்பகுதிக்கு சென்று, வெள்ளச்சியின் உடலை போலீசார் தேடினர்.
தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் தேடியும் மூதாட்டியின் உடல் கிடைக்கவில்லை. கொலை நடந்த இடம் குறித்து விஜயகுமார் முன்னுக்கு பின் முரணாக கூறுவதால், மூதாட்டியின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.