/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கரூர் மாவட்டத்தில் போலீசார் இடமாற்றம்
/
கரூர் மாவட்டத்தில் போலீசார் இடமாற்றம்
ADDED : ஜூலை 30, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார், தற்போது பணியாற்றி வரும் மாவட்டங்களில் இருந்து, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
அதில் நேற்று முன்தினம், 653 போலீசாருக்கு விரும்பிய மாவட்டங்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டது. அதில், தற்போது கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பொன்னுசாமி, திண்டுக்கல் மாவட்டத்துக்கும், வினோத்குமார் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.