/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபைல்போன் திருட்டு தடுக்க போலீசார் எச்சரிக்கை
/
மொபைல்போன் திருட்டு தடுக்க போலீசார் எச்சரிக்கை
ADDED : செப் 30, 2025 02:17 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில், நான்குரோட்டில் இருந்து கடத்துார் செல்லும் சாலையில், 2 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இக்கடைகளில் மது வாங்க வரும் குடிமகன்களிடம் இருந்து, சிலர் மொபைல்போன்களை திருடி வருகின்றனர். சில நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டியும் மொபைல்போனை பறித்துச் செல்கின்றனர்.
டாஸ்மாக் கடை அருகே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டாலும் இச்சம்பவங்கள் நடக்கிறது. இந்நிலையில் மொபைல்போன் திருட்டை தடுக்கும் வகையில், போலீசார் ஒலிபெருக்கி மூலம், மொபைல்போன் திருடர்கள் உலாவிக் கொண்டுள்ளனர், உங்களுடைய மொபைல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என, குடிமகன்
களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.