/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விதி மீறுவோருக்கு போலீசார் எச்சரிக்கை
/
சாலை விதி மீறுவோருக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜன 28, 2026 06:14 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணியாமல், விதிமுறைகளை மீறி பைக் ஓட்டி செல்லும் நபர்களால் அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி டவுன் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில், 8 இடங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. அதே போல், அதிவேகமாக பைக் ஓட்டும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, டவுன் டிராபிக் எஸ்.ஐ., மணிகண்டன் உட்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி - சேலம் சாலையில் பைக்கில் நெம்பர் பிளேட், வாகன பதிவெண் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்களை நிறுத்தி, ஆவணங்களை சோதனை செய்தனர். வாகன பதிவெண் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக் ஓட்டக்கூடாது. மீறினால், பைக்கை பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளின் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
தர்மபுரி டவுன் பகுதியில், ஒரு சில தினங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மூலம், போக்குவரத்து விதி மீறும் வாகனங்களுக்கு, ஆன்லைன் மூலம், அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

