/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2025 01:20 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவும் மற்றும் பள்ளியின் 47 வது ஆண்டு விழாவும், ஸ்டான்லி கல்வி குழுமங்களின் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. ஸ்டான்லி கல்வி குழுமங்களின் பொருளாளர் சாந்தா முருகேசன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பிரு ஆனந்த பிரகாஷ் வரவேற்றார். விஜய் 'டிவி' கலக்கப்போவது யாரு நாஞ்சில் விஜயன் மற்றும் சசிகலா, பட்டிமன்ற பேச்சாளர் நித்யா ஆகியோர், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினர். விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பல சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.