ADDED : ஜன 09, 2026 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, ஆலந்துார், பட்ரோடு ரேஷன் கடையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன், 3,000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, அதியமான்கோட்டை, கூட்டுறவு ரேஷன் கடையில், மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

