தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பொங்கல் கரும்பு கொள்முதல் பணி

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி

பொங்கல் கரும்பு கொள்முதல் பணி


ADDED : ஜன 04, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 1,101 ரேஷன் கடைகளில் மொத்தம், 4.75 லட்சம் ரேஷன் கார்டுதாரர்

களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, கரும்பு கொள்முதல் செய்ய, விவசாய தோட்டங்களை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்-டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், கடத்துார் பகுதிகளில் செங்கரும்பு அதிக அளவில்

பயிரிடப்பட்டுள்ளது.

நேற்று, கடத்துார் அடுத்த கோம்பை பகுதியில், கரும்பு கொள்முதல் செய்ய உள்ள தோட்டத்தை, மாவட்ட கலெக்டர் சதீஷ்

ஆய்வு செய்தார். அப்-போது கரும்பின் உயரம், அதன் தடிமன் ஆகிய-வைகள் சரியாக இருக்

கிறதா என, அளவீடு செய்து சரிபார்த்தார். தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவ-தற்கான பொருட்கள் தயார் நிலையில் வைக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us