ADDED : ஜூலை 29, 2025 01:46 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மஞ்சவாடியில், அரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 11.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை அ.தி.மு.க.,
- எம்.எல்.ஏ., சம்பத்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், பசுபதி, நகர செயலாளர்கள் தென்னரசு, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
