வண்டு, புழுவுடன் தரமற்ற அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் அதிர்ச்சி
வண்டு, புழுவுடன் தரமற்ற அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் அதிர்ச்சி
ADDED : நவ 24, 2026 05:53 AM
காரிமங்கலம்; காரிமங்கலத்தில் செயல்படும், 110 ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படு
கிறது.
இதில், அனுமந்தபுரம் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களாக வழங்கிய அரிசி, பழுப்பு நிறத்தில் தரமற்றதாக இருந்துள்ளது. மேலும், அரிசியில் வெள்ளை நிற புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் படி, காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார் ஆய்வு செய்தார். புழு மற்றும் வண்டுகள் உள்ள அரிசியை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கக்கூடாது என, விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார். இது குறித்து, அந்த ரேஷன் கடை விற்பனையாளர் மாதையன் கூறுகையில், ''ரேஷன் கடையில், தற்போது, 9 டன் அரிசி இருப்பு உள்ளது. பொது வினியோக திட்ட குடோனில் இருந்து வந்த அரிசியில், 9 சிப்பங்களில் தான் வண்டுகள் இருந்துள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். இங்குள்ள தரமற்ற அரிசிக்கு பதிலாக வேறு அரிசியை மாற்றி தருவதாக தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
