ADDED : அக் 19, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: மாம்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையங்களில், இன்று மின்நிறுத்தம் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:மாம்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (அக்.19) மின்நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால் அது ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

