/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : டிச 18, 2025 06:34 AM
தர்மபுரி: மார்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தர்மபுரி அடுத்துள்ள, கடகத்துார் சோமேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள அதிகார நந்திக்கு, நேற்று சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நெசவாளர் காலனியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் ஆருண்ணேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஷ்வரர் உட்பட மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் நந்தி பெருமானுக்கு பலவகை அபிஷேகம் நடந்தது.
*அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.

