/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில போட்டிக்கு தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு
/
மாநில போட்டிக்கு தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 14, 2025 02:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, தர்மபுரி விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இதில், 19 வயதுக்கு உட்பட்டோர் சீனியர் பிரிவில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இதில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகஜீவன்ராம் மற்றும் ஜெகன் குட்டிமணி ஆகியோரை சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், தலைமை ஆசிரியர் கலைவாணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பாராட்டி வாழ்த்து
தெரிவித்தனர்.