புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் பிரார்த்தனை
புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் பிரார்த்தனை
ADDED : ஏப் 04, 2026 06:24 AM

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து தேவா-லயங்களிலும், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, உயிர் துறந்த தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி-யாக அனுசரிக்கின்றனர். இதையொட்டி, தர்மபுரி அருகே அன்னசாகரம் செல்லும் சாலையில், புதி-தாக கட்டப்பட்டு வரும் துாய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில், இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வு நடந்தது. அதை தொடர்ந்து, பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளனான கிறிஸ்த-வர்கள் கலந்து கொண்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி, புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு, பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடந்-தது. இதில், கிறிஸ்தவர்கள் பாட்டு பாடி பிரார்த்-தனை செய்தனர்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடித்து இழுத்து செல்லப்படும் நிகழ்வை உணர்த்தும் வகையில், பொம்மிடியில் தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த சிலுவை பாதை பவனி பாரஸ்ட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன், தர்மபுரி மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, புனித அந்-தோனியார் ஆலயத்தை அடைந்தனர். பின் சிறப்பு ஆராதனை நடந்தது. இதே போன்று தென்கரை-கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, கடத்துார் பகுதி தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
* தர்மபுரி மாவட்டம், அரூர் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில் இருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்-களில் பெரிய சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக்கொண்டு துாய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு, இயேசு சிலுவையில் அறையப்படுவது குறித்து, காட்சி வடிவில் நாடகமாக நடித்து காட்டப்பட்-டது. அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். முடிவில், வேண்டுதல் கஞ்சி, கூழ், மோர் ஆகி-யவை வழங்கப்பட்டன.
