/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'வரும் முன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம்
/
'வரும் முன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : அக் 21, 2024 07:42 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 'வரும் முன் காப்போம்' பொது மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது. முகாமை, பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், செயல் அலுவலர் முத்து ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர், தலைமையிலான மருத்துவக் குழு-வினர் முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினர். ரத்த பரிசோ-தனை, இ.சி.ஜி., சர்க்கரை பரிசோதனைகள், கர்ப்-பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறப்பு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. காசநோய், தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது. கர்ப்பிணிகளுக்கு குடும்ப கட்டுப்பாடு முறைகள் பற்றியும், கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்ளப்படும் உணவு முறைகள் குறித்தும், விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், மருத்துவக் குழுவினர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.