/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் கிரானைட் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தனியார் கிரானைட் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2024 01:44 AM
தனியார் கிரானைட் நிறுவன
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தொப்பூர், நவ. 19-
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில், தனியார் கிரானைட் நிறுவனம் கடந்த, 35 வருடமாக செயல்பட்டு வருகிறது. இதில், 120 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 35 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய, ஆணை வந்த பிறகும், அதை நிறுவனம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில், நிறுவனத்தில் முழுநேர பணியாளர்களை, பகுதிநேர பணியாளராக மாற்றும் முடிவை கைவிடக்கோரி, அந்நிறுவனம் முன், சி.ஐ.டி.யூ., சங்க தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து, நிறுவன விற்பனை மேலாளர் அப்பாண்டையராஜ் கூறுகையில், ''எங்களது நிறுவனத்தின் கிரானைட் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஜா போர் காரணமாக, ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்களும் இல்லை. எனவே, நிறுவனத்தில் வேலை இல்லாததால், ஊழியர்களுக்கு வேலையில்லாமல், 50 சதவீத ஊதியம் வழங்க நிறுவனம் சம்மதித்துள்ளது. இதையேற்று கொள்ளாமல், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.