/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு ஆணை
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு ஆணை
ADDED : அக் 06, 2024 03:34 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினர்.
தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில் நேற்று நடந்த, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 1,965 பேர் பங்கேற்றனர். இதில், சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூரு பகுதிகளை சார்ந்த, 128 முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், 417 பேர் பல்வேறு தனியார் நிறு-வனங்களில் பணி நியமன ஆணைகளை பெற்றனர். முகாமில், மகளிர் திட்டம் சார்பாக, வட்டார வணிக வள மையம் கடனுதவி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி திட்டத்தில், 15 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 82.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கடனுதவிகளை, கலெக்டர் சாந்தி வழங்கினார்.இதில், தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், வேலை-வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்-டனர்.