தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


ADDED : டிச 19, 2025 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், வெளியிட்-டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளை-ஞர்கள் பயன்பெறும் வகையில், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்புத்-துறை, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை, 20ல் நடக்க உள்-ளது. தர்மபுரி அடுத்த சோகத்துார் பஞ்.,ல் உள்ள தனியார் (தொன்போஸ்கோ) கல்லுாரியில் முகாம் நடக்க உள்ளது. இதில், உற்பத்தி, தகவல், தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்-பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இவர்கள், 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை நடக்கவுள்ள இம்முகாமில், 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்-களும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விப-ரங்களுக்கு, dpijobfair25@gmail.com என்ற இணைய முகவரி மற்றும் 04342 - 288890 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us