ADDED : ஏப் 30, 2025 01:28 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:
கடத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 25 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊராட்சி தீர்மானத்தின் அடிப்படையிலும், பரப்பளவின் அடிப்படையிலும் சொத்து வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
தர்மபுரி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) நாகராஜ், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, கடை வரி ஆகியவற்றை நிர்ணயம் செய்வது, அதை ஆன்லைனில் செலுத்தும் வகையில், ஆன்லைனில் பதிவுகள் செய்யும் பணிக்கான பயிற்சியை வழங்கினார்.
பயிற்சியில் மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் வீரமணி, செல்வி மற்றும் ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்.
