/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நகராட்சியுடன் கிராம பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி தடங்கம் பஞ்., அலுவலகம் முன் மறியல் போராட்டம்
/
நகராட்சியுடன் கிராம பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி தடங்கம் பஞ்., அலுவலகம் முன் மறியல் போராட்டம்
நகராட்சியுடன் கிராம பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி தடங்கம் பஞ்., அலுவலகம் முன் மறியல் போராட்டம்
நகராட்சியுடன் கிராம பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி தடங்கம் பஞ்., அலுவலகம் முன் மறியல் போராட்டம்
ADDED : ஜன 04, 2025 01:37 AM
தர்மபுரி, ஜன. 4-
கிராம பஞ்.,களை, தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிட்டதை கண்டித்து, இரு பஞ்.,களை சேர்ந்த பெண்கள், சேலம் - தர்மபுரி சாலையில் நேற்று ஊர்வலமாக சென்று, கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி நகராட்சியுடன் ஏ.ஜெட்டிஹள்ளி, சோகத்தூர், இலக்கியம்பட்டி, தடங்கம் ஆகிய, 4 கிராம பஞ்.,களை இணைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில், ஏ.ஜெட்டிஹள்ளி மற்றும் தடங்கம் பஞ்.,களை சேர்ந்த, 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கிராம பஞ்.,களை நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை மற்றும் வருவாய் இல்லாமல், வரி மட்டும் உயர்வதால் நடுத்தர குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, கிராம பஞ்.,களை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில் தர்மபுரி அடுத்த, அவ்வை வழி பிரிவு சாலையில் இருந்து, ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம்
வரை சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, காலை, 9:00 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து, தர்மபுரி டி.ஆர்.ஓ., கவிதா கிராம பஞ்., மற்றும் பி.டி.ஓ.,விடம் ஒப்புதல் பெற்று வருமாறு அங்கு வந்த பெண்களிடம் தெரிவித்துள்ளார். இதில், ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த பெண்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
தடங்கம் பஞ்., சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, தடங்கம் பஞ்., அலுவலகத்திற்கு சென்று பஞ்., தலைவரிடம் தீர்மானம் நிறைவேற்றக்கோரி வாக்குவாதம் செய்ததுடன், பஞ்., அலுவலகம் முன், பழைய அதியமான் பைபாஸ் சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தர்மபுரி நகராட்சியுடன், தடங்கம் கிராம பஞ்., இணைத்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும், 2,500- க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.
தர்மபுரி டி.எஸ்.பி.,(பொ) ராஜாசுந்தர், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா, நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார், பி.டி.ஓ., சர்ஹோத்தமன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய தொடங்கினர்.
இதனால், போலீசார் மற்றும் பெண்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், 15 பேரை கைது செய்ததும், மற்றவர்கள் கலைந்து சென்றனர். தடங்கம் பஞ்., அலுவலகம் முன், 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

