தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 26, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தர்ம-புரி மாவட்ட குழு சார்பில், மாநிலம் தழுவிய கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கமலாமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய தேசிய

மாதர் சம்மேளனம் மாநில துணை செயலாளர் லலிதா பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவதை தடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்மு-றைகளை கட்டுப்படுத்த வேண்டும். அரூர் நக-ராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சியில் உள்ள பெண்களுக்கு, 100-நாள் வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தனியார் நடத்தும் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்து வட்டி கொடு-மைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்க-ளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்புகள் உருவாக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு நிலுவையில்லாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்-பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us