/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 01:11 AM
கிருஷ்ணகிரி, டிச. 20-
சட்டமேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவமதிக்கும் விதமாக பேசியதை கண்டித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார்.
* ஓசூரில், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், காங்., கட்சி சார்பிலும், காவேரிப்பட்டணத்தில், வி.சி., கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மாவட்ட, தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், தர்மபுரி, தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையிலும், அரூர் கச்சேரிமேட்டில், மேற்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சவுந்தரராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரூர் தாலுகா அலுவலகம் முன்பும், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலும், வி.சி.,கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.