ADDED : ஆக 06, 2026 01:34 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர்கள் ராஜி, கிருஷ்ணன், செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரதாபன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி தாலுகா ஏ.ரெட்டிஅள்ளி வருவாய் கிராமத்தில், நார்த்தம்பட்டி பட்டியலின அருந்ததியர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில், அந்த மக்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்க, பயனா-ளிகள் பட்டியலை தர்மபுரி தனி தாசில்தாருக்கு அனுப்ப வேண்டும். வேறு வருவாய் கிராமங்களின் இருக்கும் பினாமி பய-னாளிகள் பட்டியலை நீக்குவதுடன், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
